விகாரைகளிலுள்ள பெளத்த மதகுருக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
தான் தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அதனால் மன்னிப்பு கேட்பதற்கான எந்த தேவையும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
