இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கைக்கு இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பு அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து பி.பி.சி. உலக செய்திச் சேவை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. அவ்வாறான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுமித் அத்தபத்து மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
