தகனம் செய்யும் முறையிலான இறுதி சடங்குக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், ஐந்து கோவிட் 19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட காலமாக கொழும்பில் உள்ள போலீஸ் சவக்கிடங்கில் தங்கியுள்ளதாக சிங்கள செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
தகனத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் மற்றும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் விளைவாக சடலங்கள் சவக்கிடங்கில் தங்கியுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இறந்த 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்பட வேண்டும், இருப்பினும் இந்த காரணத்தால் ஐந்து உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் சவக்கிடங்கில் உள்ள உடல்களில், இரண்டு கொம்பனித்தெரு பிரதேசத்தை சேர்ந்தவை, மற்றும் தலா ஒன்று மருதான, மாலிக்காவத்த மற்றும் கோட்டை பகுதிகளை சேர்ந்தவையாகும்.