கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து எரியூட்டி வரும் இலங்கை அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
நாளை - 05.11.2020 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணிக்கு சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்னிலையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமுமுக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.