Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

அமைச்சர் கம்மன்பில மீது நம்பிக்கையில்லா பிரேரணை? − நடவடிக்கைகள் தீவிரம்

 



எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வர எதிர்க்கட்சி முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது.


அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் பட்சத்தில், அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற பிளவை வெளிகொணர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில மீது கோபம் கொண்டுள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சந்தர்ப்பத்தில், எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்டு, மேலும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்த செயற்பட்டமையை அடிப்படையாக வைத்து, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »