Our Feeds


Tuesday, September 28, 2021

ShortNews

VIDEO: ஸஹ்ரானின் போனிலிருந்த motherboard எங்கே? அதனை வெளிநாட்டு உளவுப் பிரிவுக்கு வழங்கியது யார்? - அமைச்சர் தயாசிரி கேள்வி



ஸஹ்ரானின் போனில் இருந்த motherboard ஐ எடுத்தது யார்? என்பது பற்றி எவறாவது பேசியுள்ளார்களா? அதைப் பற்றித் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. என அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் போனில் தானே அனைத்துத் தகவல்களும் இருக்கிறது? அப்படியிருக்கையில் அந்த போனில் இருந்த motherboard ஐ வேறு ஒரு நாட்டின் உளவுப் பிரிவினர் எடுத்து செல்வதற்கு இந்நாட்டின் பொலிசார் இடமளிக்கிறார்கள் என்றால், முதலில் அது கிடைத்தால் முக்கிய சூத்திரதாரியை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

எனவே, இதைப் பற்றியும் பேசவேண்டும். இதற்கு துணை போன அரசியல்வாதிகள் பற்றியும் பேச வேண்டும். இங்கிருக்கும் முன்னால் ஜனாதிபதிக்கும், முன்னால் அமைச்சர்களுக்கும் திட்டுவதினால் பலனில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »