Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

இன்று(11) மின்வெட்டு அமுல்படுத்தும் விதம்.

 


இன்றைய (11) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு இன்று(11) காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »