பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிவ் அல்வியின் வாகனத் தொடரணிக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியனதுடன் மேலும் 22 பேர் காயமடைந:துள்ளனர்.
பலோசிஸ்தான் மாகாணததின் சிபி நகரில் நேற்று செவ்வாய்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் பாதுகாப்பு துறை சார்ந்த 19 பேரும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துளனர்.
ஜனாதிபதி ஆரிவ் அல்வியும் ஏனைய வி.ஐ.பிகளும் சிபி அரங்கில் நடைபெற்ற வருடாந்த சிபி கலாசார விழாவில் கலந்துகொண்டுவிட்டு திரும்புகையில், அரச வாடி வீடு ஒன்றின் அருகில் ;, ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கடந்து சிறிது நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்கச் செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.