Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

ஜெனீவாவில் என்ன பேசப்பட்டது? ரஞ்சனை சந்தித்து ஹரீன், மனுஷ விளக்கமளிக்க முடிவு



ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சிறையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.


இந்த சந்திப்பு இன்று (11) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளது.


ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டிடம், ராமநாயக்கவின் விடுதலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைக் கோரும் கடிதத்தை கையளித்துள்ளனர்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சனை ராமநாயக்கவை விடுதலை செய்ய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு பச்சலெட்டை அந்தக் கடிதத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »