Our Feeds


Thursday, March 10, 2022

ShortTalk

JUST_IN: ரணிலுடன் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டிய தேவை கிடையாது! - அமைச்சர் திலும் அமுனுகம



(இராஜதுரை ஹஷான்)


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டது என்பதை நன்கு உணர முடிகிறது. முழு நாடும் சரியான பாதைக்கு என்ற மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருடன் ஒன்றிணைந்திருந்த சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விமல்,கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிபோனதன் பின்னர் தனித்து செயற்படுவதனை காண முடிகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »