Our Feeds


Saturday, March 26, 2022

Anonymous

தொடரும் மின்வெட்டு - குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விற்கப்படும் உணவுகள் தொடர்பில் PHI சங்கம் கடும் எச்சரிக்கை

 



மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு உபுல் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »