Our Feeds


Monday, March 7, 2022

ShortTalk

#PHOTOS: இலங்கையின் மிகப்பெரும் சீமெந்து தொழிற்சாலை - லன்வா சன்ஸ்தா நாளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

 லன்வா சன்ஸ்தா சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

லன்வா சன்ஸ்தா சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்
உள்ளூர் சந்தையில் காணப்படும் சீமெந்து தட்டுப்பாட்டைக் குறைத்து கட்டுமானத் துறையை ஊக்குவிக்க எதிர்பார்ப்பு

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி ஆலைகளில் ஒன்றான லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனம்  நாளை (07) திங்கட்கிழமை தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் உள்ள இந்தத் தொழிற்சாலை 63 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதாகும். முதலீட்டுச் சபையின் அனுமதியைப் பெற்றுள்ள லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த உற்பத்தித் திறன் 4 மில்லியன் மெற்றிக்தொன் ஆக அமைவதுடன், முதலாவது கட்டத்தின் உற்பத்தித் திறன 2.8 மில்லியன் மெற்றிக்தொன்னாக அமையும்.

புதிய தொழில்நுட்பத்தை வலியுறுத்தும் அதாவது குறைந்த வீண் விரயத்துடன் அனைத்து கலவைகளையும் மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனமை இத்தொழிற்சாலைகளின் பலத்தில் ஒன்றாகும்.முதலாவது கட்டம் பூர்த்திசெய்யப்பட்டமை மற்றும் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான கருத்துத் தெரிவிக்கையில்,

"உலகத் தொற்றுநோயைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் முழு உலகமும் வளமைக்குத் திரும்பிவரும் நேரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதையிட்டு நாம் மிகவும் ஆர்வமாகவுள்ளோம்.


 
இந்த முயற்சியானது பல்வேறு வழிகளில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதொன்றாக அமையும். தொழில்நுட்ப முன்னேற்றம், அந்நியச் செலாவணி போன்றவற்றின் ஊடாக பொருhதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன், கட்டுமானத்துறை தற்பொழுது எதிர்கொண்டுள்ள சீமெந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் அமையும்" என்றார்.

ஆலையையும், துறைமுகத்தையும் இணைக்கும் 2.4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பட்டியூடான இணைப்புடன் (Covered conveyer belt) கூடிய வசதி குறைந்த வீண் விரயத்தையும், சுற்றாடல் மாசடைவதையும்குறைப்பதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.உற்பத்தி வசதியானது முழுமையான தானியங்கி ஸ்டக்கர் ரெக்லெமர் யார்ட் (Stacker Reclaimer Yard) மற்றும் பிரிட்ஜ் டைப் ஷிப் அப்லோடர்ஸ் (Bridge Type Ship Unloaders) என்பன சரக்குக் கப்பலைக் கையாழ்வதை இலகுவாக்குவதுடன், மனித உழைப்பு அற்ற இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தரத்துக்கு இத்தொழில்துறையைக் கொண்டுசெல்வதற்கும் இது முன்னோடியாக அமையும்.

அதேநேரம், லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தம்மிக லொக்குவிதான குறிப்பிடுகையில்,
"லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனத்தின் செயற்பாடுகளின் ஊடாக போர்ட் சிட்டி மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போன்ற உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற அனைத்தின் தேவைகளையும் பூர்த்திசெய்யக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண போலாந்து சீமெந்து (SLS 107) போலந்து ஸ்லக் சீமெந்து (SLS 1697) போலந்து சுண்ணாம்பு சீமெந்து (SLS 1247) போன்ற பரந்துபட்ட உற்பத்திகளின் ஊடாக இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என நம்புகின்றோம்" என்றார்.

லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (தனியார்) நிறுவனம், இலங்கையின் முதலாவது இரும்பு உற்பத்தியாளரான சிலோன் ஸ்டீல் கோப்ரேஷன் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும்.

சந்தையின் ஆதிக்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் தரம் மற்றும் புத்தாக்கம் என்ற தயாரிப்புத் தத்துவத்தை இக்குழுமம் கொண்டுள்ளது. இத்திட்டமானது உள்நாட்டு கட்டுமானத் துறைக்கு புத்துயில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சீமெந்துக்கான உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்வதன் ஊடாக தற்போதைய சூழ்நிலையில் காணப்படும் இறக்குமதி சார்ந்த சுமையிலிருந்து உள்நாட்டுப் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »