Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் தொல்பொருள் இருக்கிறதா? - பாலமுனையின் முள்ளிகுளம் மலைமேடு விவகாரம் தொடர்பில் ரவுப் ஹக்கீம் கேள்வி - VIDEO



(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)


கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் தனியான செயலணி அமைத்து அந்த பிரேதேசத்தில் தொல்பொருள் தொடர்பாக அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஓர் இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும் இந்த செயலணியுடன் பாதுகாப்பு பிரவினரும் செல்வதால் பிரதேச மக்கள் குழப்படைகின்றனர்.

அதனால் தொல்பொருள் தொடர்பாக அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் ஆரம்பமாக அந்த பிரதேச மக்களுடன் அதுதொடர்பில் கலந்துரையாட வேண்டும். அத்துடன் அம்பாறை முள்ளிகுளம் பிரதேசத்தில் சிலை ஒன்றை வைப்பதற்கு எடுத்த முயற்சி கவலையளிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அம்பாரை மாவட்டத்தில் பாலமுனை பிரதேசத்தில் முள்ளிகுளம் என்ற மலைமேடு ஒன்று உள்ளது. அந்த இடத்துக்கு தேரர்கள் சிலரும் பாதுகாப்பு படையினர் சிலரும் வேறு சிலரும் நேற்று (நேற்று முன்தினம்) காலை அங்கு சென்று திடீரென கட்டுமான வேலை ஒன்றை ஆம்பிக்க முற்பட்டபோது பிரதேச மக்கள் குழப்பமடைந்தனர்.

தொல்பொருள் திணைக்களம் அந்த இடத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு உள்ளதா இருந்தால் அது தொடர்பாக அந்த பிரதேச மக்களுடன் கலந்துரையாட வேண்டும். பிரதேச சபையுடன், பிரதேச செயலகத்துடன் கலந்துரையாடவேண்டும். அவ்வாறு இல்லாமல் திடீரென அந்த இடத்துக்குவந்து கட்டுமான வேலை ஆரம்பிக்கின்றனர். அந்த இடத்தில் சிலை ஒன்றையோ வேறு ஏதாவது ஒன்றை வைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

அதேபோன்று இறக்காமம் பிரதேசத்தில் மாயக்கல்லி பிரதேசத்தில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் வேறு கட்டுமானம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டவுள்ளது . தொல்பொருள் திணைக்களம் குறித்த இடத்தில் அகழ்வு உள்ளதா? அந்த இடம் வர்த்தமானி படுத்தப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அந்த பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

அவ்வாறு தொல்பொருள் இருந்தால் இலங்கையர் என்ற வகையில் அதனை பாதுகாக்க நாங்களும் கடமைப்பட்டுள்ளோம். என்றாலும் அந்த பிரேதேசத்தில் கண்ணுக்கு காணும் தூரத்தில் ஒரு சிங்கள குடும்பமும் இல்லாத நிலையில் இவ்வாறான கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சி தொடர்பில் கவலையடைகிறோம். அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மாவட்ட அதிபருக்கும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். அவரும் விசாரணை மேற்கொள்ளவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் தொல்பொருள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இருக்கும் திணைக்களம் அவர்களின் கடமையை வெளியாட்களுக்கு வழங்க முடியாது. அதேபோன்று கிழக்கு மாகாணத்துக்கு தனியான செயலாணி அமைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம்தான் தொல்பொருள் உள்ளதா? வேறு மாகாணத்தில் தொல்பொருள் இல்லையா?. கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் தனியான செயலணி அமைத்து, அதில் ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமித்துக்கொண்டு அந்த இடங்களுக்கு செல்கின்றனர்.

அவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவ பிரதானிகள் செல்கிறார்கள். இவ்வாறு ஒரு மதத்தை, இனத்தை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »