Our Feeds


Friday, April 15, 2022

ShortTalk

இடைக்கால அரசாங்கம் நெருக்கடிகளுக்கு தீர்வாகாது:நிலையான அரசையே சர்வதேசம் வலியுறுத்துகிறது! –முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரண



(இராஜதுரை ஹஷான்)


பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தமைமையில் குறைந்தபட்ச அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் ஸ்தாபிக்கப்படும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. அரசியல் ஸ்திரத்தன்மையிலான நிலையான அரசாங்கத்தையே சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும். 20 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 8 நாட்களுக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்திலும்,ஒரு சிலரது தவறான பிரசாரங்களினாலும் பொதுமக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை சேமித்துக் கொள்கிறார்கள்.

மருந்து பொருட்கள் கொள்வனவுக்கு துரிதகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் நிரந்த தீர்வு காண முடியும் என இலங்கை மின்சார சபையும், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது.சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இம்மாத காலத்தில் நிரந்தர தீர்வு காண முடியும்.

இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து தற்போது அரசியல் மட்டத்தில் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. இடைக்கால அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் இடைக்கால அரசாங்கம் குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்துவது பயனற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் ஸ்தாபிக்கப்படும். இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் சர்வதேச நாடுகளினதும்,சர்வதே நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் காணப்பட வேண்டும் என சர்வதேசம் வலியுறுத்தியது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »