Our Feeds


Monday, May 9, 2022

ShortTalk

1,166 KM தொலைவில் 480 கோடி ரூபா போதைப் பொருளுடன் 7 வெளிநாட்டவர்கள் இலங்கைக் கடற்படையினால் கைது



சுமார் 480 கோடி (4,800 மில்லியன்) ரூபா பெறுமதியானது என கருதப்படும் போதைப் பொருளை சர்வதேச கடற்பரப்பிலிருந்த படகில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகிலிருந்த 7 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுளளனர்.


இலங்கைக்கு தெற்கே 630 கடல் மைல் (1166 கிலோமீற்றர்) தொலைவில் வைத்து இப்போதைப்பொருளை இலங்கைக் கடற்படையினர் கடந்த 6 ஆம் திகதி கைப்பற்றியுள்ளனர். இப்போதைப் பொருளையும் சந்தேக நபர்களையும் இலங்கைக்க கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கடத்தல் நடவடிக்கையை போலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து, இலங்கைக் கடற்படை முறியடித்தது.

இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலையடைத்து, ஏஸ்.எல்.என்.எஸ். சயுரல (SLNS Sayurala ) கடற்படை கப்பல் மூலம் சுமார் 3 வாரங்களாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வந்தது.

பின்னர், எந்த நாட்டினுடையது என அடையாளம் காணப்படாத படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் கண்டனர்.

அப்படகை சோதனைக்காக நிறுத்துமாறு கடற்படையினர் கேட்டபோது, படகிலிருந்தவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதையடுத்து கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தனர்.

அப்படகு தப்பிச் செல்ல முற்பட்டபோது, அதை கடற்படை கப்பல் துரத்திச் சென்று இடைமறித்தது. கடற்படைக் கப்பலுடன் மோதிய நிலையில், படகின் முன்புறம் சேதமடைந்தது.

அதன்பின் படகை சோதனையிட்ட இலங்கைக் கடற்படையினர் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோகிராம் போதைப்பொருளைக் கைப்பற்றினர். 240 பொதிகளில் சுற்றப்பட்டு 7 மூடைகளில் இவை வைக்கப்பட்டிருந்தன. இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்காக இப்படகு காத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேற்படி படகுக்கு ஏற்பட்ட சேதத்தையடுத்து அதற்குள் நீர் புகுந்ததால் மே 7ஆம் திகதி அப்படகு மூழ்கி விட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் வெளிநாட்டவர்கள் 7 பேரையும் கடற்படையினர் இலங்கைக்கு கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர்.

அதன்பின் போதைப்பொருளின் தன்மை மற்றும் துல்லியமான எடை மதிப்பிடப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »