(எம். செல்வராஜா பதுளை நிருபர்)
12 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை கிராம மக்கள் பிடித்து, ஹல்துமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து, சிறுவனின் தந்தை ஹல்துமுல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் சந்தேக நபரான பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும்சிறுவன், பிரதேச அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிக்கு விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸார் தெரிவித்தனர்.