Our Feeds


Friday, May 27, 2022

SHAHNI RAMEES

21வது திருத்தத்துக்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - சட்ட மா அதிபர்!

 

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமா அதிபர் இன்று (26) உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திக தேமுனி டி சில்வா உச்ச நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார்.



அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்துக்கு எதிராக கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இதனை அவர் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »