அநுராதபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகளுக்கும், அநுராதபுர மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீடுகளுக்கும் தீ வைத்து எரித்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் உட்பட மேலும் 22 பேரை பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அநுராதபுரம் குருந்தன்குளம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றின் விஹாராதிபதி மற்றும் அநுராதபுரம் புதிய நகரைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.