Our Feeds


Friday, May 13, 2022

ShortTalk

மே 9ம் திகதி அமைதியின்மை நேரத்தில் தப்பிச்சென்ற கைதிகளை சரணடையுமாறு அறிவுறுத்தல்



கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.


தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதன் பிரகாரம், கைதிகள் 0114 677 177 அல்லது 0114 677 517 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »