Our Feeds


Saturday, May 28, 2022

SHAHNI RAMEES

பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ரோயல்ஸ்...!

 

ஐபிஎல் கிரிக்கட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் பெங்களூரு அணியுடனான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக ராஜட் படிதர் 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் 106 ஓட்டங்களின் உதவியுடன் 18.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதனூடாக, ஐபில் 2022ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »