Our Feeds


Saturday, May 28, 2022

ShortTalk

குடும்பப் பெண்ணுடன் தங்குமிட அறையில் சிக்கிய வைத்தியர்; பொதுமக்கள் பிடித்ததால் பதட்டம்: கல்முனையில் சம்பவம்.



அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், குடும்பப் பெண் ஒருவருடன் –  வைத்தியசாலையின் தங்குமிட அறையில் தனிமையில் இருந்தபோது, பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.


கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை  03 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது;


ரத்தினபுரி மாவட்டம் – பெல்மதுளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய வைத்தியர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லவிருந்தார்.


கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் (radiologist specialist) விசேட வைத்திய நிபுணராக இவர் கடமையாற்றி வந்துள்ளார்.


இந்த நிலையில் இவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை (28) அன்று இடமாற்றலாகி  செல்லவிருந்தார்.


இவ்வைத்தியருக்கும் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய  பெண்ணுக்கும் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையமொன்றில் பழக்கம் ஏற்பட்டு பின்னர்  அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது.


இப்பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 03 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.


இந்தப் பெண்ணும் மேற்படி வைத்தியரும் சம்மாந்துறை பகுதியில் உள்ள  தனியார் மருத்துவ சிகிச்சை பிரிவில் சந்தித்துள்ளதுடன் இவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது.


இவர்கள் கடந்த காலங்களில் மட்டக்களப்பு, அம்பாறை  பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளுக்குச் சென்று சந்தோசமாக இருந்துள்ளனர்.


இந்த நிலையில் திடீரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு  கிடைக்கப்பெற்றயால், தான் சேவை மேற்கொண்ட  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட  அறைக்கு குறித்த பெண்ணை வைத்தியர் அழைத்து சென்றுள்ளார்.


இதனை அறிந்துகொண்ட  பொதுமக்களும்  வைத்தியசாலை தரப்பினர் சிலரும் இணைந்து,  தங்குமிட அறையில் இருந்த வைத்தியரையும் பெண்ணையும் பிடித்து, உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து செல்ல முயற்சித்ததால் அங்கு சிறு பதட்டமும் ஏற்பட்டது.


இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருடைய முறைப்பாட்டுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று, வைத்தியரையும் அவருடனிருந்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


பின்னர் பொலிஸ் நிலையத்தில் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட வைத்தியருக்கு எதிராக உள்ள விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. 


நன்றி: புதிது தளம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »