Our Feeds


Thursday, May 26, 2022

ShortTalk

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவரிடம் லஞ்சம் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர்.



(எம்.எம்.சில்வெஸ்டர்)


தனியார் பஸ்களுக்கு டீசல் நிரப்பும்போது எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் முடிவடைந்ததன் பின்னர், போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாகவும் ‍அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பஸ்ஸுக்கு தேவையான டீசல் இல்லாத நிலையில் நாம் சில தீர்மானங்களை எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம். பஸ்களுக்கு டீசல் பெற்றுக் கொள்ளும்போது, எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருகின்றனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் இருக்கத்தக்கதாக இவ்வாறு அவர்கள் இலஞ்சம் கோருகின்றனர். அத்துடன், நுகேகொடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் தான் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கையில் தன்னிடம் 1,000 ரூபாவை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் இலஞ்சமாக கோரியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »