சில நிபந்தனைகளின் கீழ் புதிய அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி இதனைத் தெரிவித்துள்ளது.
அக்கட்சி முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதவியை இராஜினாமா செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழுத்தங்களை பிரயோகிக்க கூடாது ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.