Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக முடக்கினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்! - விஜித ஹேரத்

 



நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து

, நாடாளுமன்றத்துக்குள் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச்சொத்து துஷ்பிரயோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.


ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமான முடக்கினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ‘ரணில் ராஜபக்க்ஷ’ மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறார். அடக்கு முறையை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசமுறை கடன் 52 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் பணவீக்கம் 60 சத வீதமாக காணப்படுகிறது.எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.


பல்வேறு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டத்;தில் ஈடுப்பட்டுள்ளார்கள். கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆதரவாரவாளர்கள் காலி முகத்திடல் போராட்டகளத்தில் மீது வன்முறையான தாக்குதலை மேற்கொண்டதை தொடர்நது நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெற்றன.


இதனை தொடர்ந்தே மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோட்டபய ராஜபக்க்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ராஜபக்க்ஷர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க ராஜபக்க்ஷர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டகாரர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளார். போராட்டகாரர்களை தீவிரவாதிகள் என சுட்டிக்காட்டுவது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »