Our Feeds


Friday, October 7, 2022

ShortTalk

சர்வதேசத்துக்கு வழங்கிய ஆதரவை மீறிவிட்டது அரசு – பீரிஸ்.



”சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பிலும் சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படாது.” – என்று சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

"கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, நானே வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டேன். அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக மறுசீரமைக்கப்படும் எனவும், அதுவரை அச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுதி வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மிகவும் பொறுப்புடன் அந்த உறுதிமொழிய வழங்கப்பட்டது.

ஆனால் அந்த உறுதிமொழி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புபடாத விடயங்களுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தாக்கமே இம்முறை ஜெனிவாவில்எதிரொலித்தது.அதாவதுவாங்கிக்கட்டிக்கொண்டுள்ளோம் எனலாம்.

சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கினால் அதனை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கக்கூடாது, அவ்வாறு வழங்கினால் சர்வதேச சமூகம் நம் நாடு மீது நம்பிக்கை இழக்கும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு குறித்தும் ஐயப்பாடே நிலவும்." – என்றார் பீரிஸ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »