கண்டியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சுமார் 20,000 ரூபா பெறுமதியான ஆடைகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் புத்தாண்டுக்கு அணிவதற்காகவே இவ்வாறு ஆடைகளைத் திருடியதாக சந்தேக நபர்கள் இருவரும் கூறியதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சகோதரிக்கு 28 வயது என்றும் அவரது தங்கைக்கு 25 வயது எனவும் கண்டி தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.