Our Feeds


Saturday, December 17, 2022

News Editor

பட்ஜெட் காலத்தில் நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக சுமார் 20 கோடி ரூபா செலவு



 

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற மொத்த நாட்கள் 20 ஆகும்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.

வரவு செலவுத்திட்ட குழு விவாதம் நவம்பர் 23ஆம் திகதி தொடங்கி கடந்த 8ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெற்றது.

இதேவேளை, கடந்த 13ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விசேட நாடாளுமன்றக் கூட்டம் இடம்பெற்றதுடன், கேள்விகளைக் கேட்பதற்காக எம்.பி.க்கள் பலரும், கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தச் சந்திப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »