Our Feeds


Thursday, December 22, 2022

ShortTalk

நடுக்கடலில் சிக்கியுள்ள ரோகிங்யா முஸ்லிம் அகதிகள் ; சிறுவர்கள் மரணம் ; மழை நீரை அருந்தவேண்டிய நிலைஇந்திய கரையோரத்தில் மூன்று வாரகாலமாக ரோகிங்யா அகதிகளின் படகு தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்  படகிலிருந்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


குறிப்பிட்ட படகில் 160 பேர் பட்டினிநிலையில் சிக்குண்டுள்ளனர் எனஅவர்களின் குடும்ப உறவினர்களும் அகதிகளிற்கான ஐநா அமைப்பும் தெரிவித்துள்ளன.

படகில் உள்ள முகமட் ரெசுவான் கான் என்பவர் இரண்டு குழந்தைகளும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் உணவு மருந்தோ குடிப்பதற்கு நீரோ இல்லை என தெரிவித்துள்ளார்.

தனது சகோதரியும் ஐந்து வயது குழந்தையும் குறிப்பிட்ட படகில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம் அவர்களை காப்பாற்றவேண்டும் என விரும்;புகின்றோம்இஅவர்கள் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகி வருகின்றது என கான் படகின் தலைமை மாலுமியிடம் ஞாயிற்றுக்கிழமை இறுதியாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

அந்தமான்  நிக்கோபார் தீவுகளிற்கு அருகில்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகில் உள்ளவர்கள் குறித்தே இந்த  தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பரில் இயந்திரம் பழுதடைந்துள்ளதை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் கடலில் தத்தளிக்கின்றது.

மியன்மாரிலிருந்து வன்முறை காரணமாக தப்பியோடிய ரோகிங்யா அகதிகளில் ஒரு மில்லியனிற்கும் அதிகமானவர்கள் தங்கியிருக்கின்ற பங்களாதேசிலிருந்து இந்த படகு மலேசியா செல்வதற்கு முயன்றுள்ளது.

குறிப்பிட்ட படகில் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என உறுதிப்படுத்த முடியாத நிலையில் சிஎன்என் காணப்படுகின்றது

20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் கிடைக்கின்றன என ஐநா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கையும் இந்தியாவும் எடுக்கவேண்டும் என யுஎன்எச்சீஆரின் ஆசியாவிற்கான பேச்சாளர் பாபர் பலோச் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்களை காப்பாற்றுவதற்கும் மேலதிக உயிரிழப்புகளை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கை அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் நாடுகள் நடவடிக்கை எடுக்காமலிருப்பது கடந்து போகும் ஒவ்வொரு நாளும் மனித துயரங்களையும் துன்பகரமான சம்பவங்கiயும் அதிகரிக்கின்றது என்ற எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிக்கி;ன்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட படகில் உள்ளவர்களை அவசரமாக மீட்குமாறு  தென்கிழக்காசிய நாடுகளின் நாடாளுமன்ற குழுவை சேர்ந்தவர்களின் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை 104 அகதிகளை மீட்டுள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

சிஎன்என் இலங்கை இந்திய கடற்படையினரை கருத்துக்களிற்காக தொடர்புகொண்டுள்ளது.

இந்த வருடம் மாத்திரம் 2000 ரோகிங்யாக்கள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என ஐநா கருதுவதாக பலோச் தெரிவித்துள்ளார்.

பங்களாதேசின் கொக்ஸ் பசார் அகதிமுகாமிலிருந்தே பெருமளவானவர்கள் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்தமுகாமில் நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது பெண்கள் வன்முறைகள் மற்றும் பாலியல் வன்முறை ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

மேற்கு ரக்கைன் மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தின் பாரிய மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் காரணமாக ஆயிரக்கணக்கான ரொகிங்யா இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதை தொடர்ந்து இந்த முகாமில் அகதிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

முகாமில் உயிர் வாழ்வது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது தீ காரணமாக பல குடிசைகள் எரியுண்டுள்ளன மழை காலங்களில் பெரும் சேதம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக அங்கிருந்து எப்படியாவது வெளியேற துடிக்கும் அகதிகள் சட்டவிரோத குடியேற்றவாசிகளிற்கு பெருந்தொகை பணத்தை செலுத்துகின்றனர்.

தனது சகோதாரி தனது மகளிற்கு சிறந்த வாழ்க்கையை வழங்கவேண்டும் என விரும்பினார் இதன் காரணமாக நவம்பர் 25ம் திகதி ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்தார் என கான் தெரிவிக்கின்றார்.

ரோகிங்யா மக்கள் இயலாமையின் பிடியில் சிக்குண்டுள்ளனர் அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க தயாராக உள்ளனர் என்கின்றார் அவர் .

பங்களாதேசின் கொக்ஸ் பசாரிலிருந்து மலேசிய நோக்கிய ஆபத்தான பயணம் பல வாரங்கள் பிடிக்க கூடியது.கடல் நிலைமை மிகவும் ஆபத்தானது.

படகில் உள்ளவர்கள்  மழைநீரை அருந்துகின்றனர் சிலர் கடல்நீரை அருந்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ரகன் உடினின் 17 வயது சகோதரரும் குறிப்பிட்ட படகில் இருக்கின்றார் தனது நோய்வாய்ப்பட்ட பெற்றோரின் மருத்துவ செலவிற்காக பணம் உழைப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

நாங்கள் அவரின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள உடின் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »