Our Feeds


Saturday, December 17, 2022

ShortTalk

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை - இதுவரை நடந்தது என்ன?



ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும், தொழிலதிபருமான தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் சுமார் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினேஸ் ஷாப்டரின் காரில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொண்ட சாட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணைகள் தொடர்பிலான விடயங்களை பொரளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, பிரையன் தோமஸிற்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »