Our Feeds


Thursday, December 22, 2022

ShortTalk

வரவேற்ப்பு நிகழ்வில் மக்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஆர்ஜென்டீனா வீரர்கள் - ஹெலியில் பறந்தனர்.



உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன வீரர்களுக்கு, ஆர்ஜென்டீனாவில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போது, திறந்த பஸ் பயணத்தை இடையில் கைவிட்ட வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் பறந்தனர்.


வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் நகர முடியாத அளவுக்கு வீதியில் மக்கள் திரண்டமையே இதற்குக் காரணம்.

உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்ஜென்டீனாவை சென்றடைந்தனர்.

அன்றைய தினம் ஆர்ஜென்டீனாவில் விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டு, வீரர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தலைநகர் புவனோஸ் அய்ரிஸின் புறநகர் பகுதியிலிருந்து, தலைநகரின் மத்திய பகுதிவரை 30 கிலோமீற்றர் தூரம் திறந்த பஸ்ஸில் வீரர்கள் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் புவனோஸ் அய்ரிஸில் திரண்டிருந்தனர். சுமார் 40 லட்சம் பேர் பஸ் பயணம் செய்யவிருந்த வீதிகளில் திரண்டிருந்தனர் என ஆர்ஜென்டீன பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். 

வீரர்கள் பயணம் செய்த பஸ் நகர முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வீதிகளில் நிறைந்திருந்தது. 

மேம்பாலம் ஒன்;றின் கீழ் சென்றபோது அதன் மீது பாய்வதற்கும் ரசிகர்கள் சிலர் முயன்றனர்.

எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மெதுவாக பஸ் நகர முடிந்தது.

இதையடுத்து, வீரர்களின் பஸ் பயணம் இடையில் கைவிடப்பட்டு, ஹொலிகொப்டர் மூலம் வீரர்கள் ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்தின் பயிற்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

இதனால் புனோஸ் அய்ரிஸில்  விளையாட்டுக் கொண்டாட்டங்களுக்கான மத்தியநிலையமாக விளங்கும் நினைவுச்சின்னத்துக்கு அருகில் காத்திழருந்த ரசிகர்கள், தமது நாயகர்களை காண முடியாதநிலை ஏற்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »