Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் குறித்து வெளியான மற்றுமொரு விவகாரம்!



பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தாமை உட்பட பல நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.


2021ஆம் ஆண்டு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான சுயநிதி கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகம் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 10 வீதம் முதல் 25 வீதம் வரை பல்கலைக்கழக அபிவிருத்தி நிதிக்கு வரவு வைக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் இங்கு பல்கலைக்கழக அபிவிருத்தி நிதி எதுவும் நிறுவப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், தற்போது இயங்கும் 12 பாடநெறிகளில் பாடத்திட்டங்கள் திருத்தப்படாமல் 03 வருடங்கள் கடந்துள்ள போதிலும், புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆண்டு முதல் புதிதாக 15 பாடப்பிரிவுகள் தொடங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மொழித்திறன் மேம்பாட்டு கட்டிடத்தில் அமைந்துள்ள கணினி ஆய்வு கூடத்திற்கு வழங்கப்பட்ட 37 கணினிகள் மற்றும் 47 கணினி மேசைகள் மற்றும் அடையாளம் காண முடியாத பெறுமதியான கதிரைகள் என்பனவும் 2019 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டன.

அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும், மேற்படி அலுவலக உபகரணங்களும் இந்த அறிக்கை வெளியாகும் நாள் வரை செயலிழந்துள்ளதாகவும் இந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி: தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »