Our Feeds


Wednesday, December 21, 2022

ShortTalk

அமெரிக்கர்கள் அனைவரையும் கொல்லக்கூடிய அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது



அமெரிக்கர்கள் அனைவரையும் கொல்லக்கூடிய அளவிலான ஃபென்டனில் (fentanyl) எனும் போதைப் பொருளை 2022ம் ஆண்டில் தாம் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்பு முகவரகம்  (DEA) தெரிவித்துள்ளது.


ஃபென்டனில் போதைப்பொருள் ஹெரோயினைவிட 50 மடங்கு அதிக வலிமையானது. 

வேறு இரசாயனங்களுடன் கலந்து, மயங்கமருந்து மற்றும் வலி நிவாரண மருந்து தயாரிப்பில் ஃபென்டனில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், நேரடியாக 2 மில்லிகிராம் ஃபென்டனில் போதைப்பொருளை உட்கொண்டால் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்நிலையில், இவ்வருடம் 379 மில்லியன் டோஸ் ஃபென்டனிலை தாம் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்பு முகவரகம்   தெரிவித்துள்ளது. 

இவற்றில் பெருமளவான போதைப்பொருள் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக அம்முகவரம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 4500 கிலோகிராமுக்கு (10,000 இறாத்தல்) அதிகமான ஃபென்டனில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்முகவரகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் மருந்து செறிவு அதிகமானதால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் மரணங்களுக்கு ஃபென்டனில் காரணம் என மேற்படி முகவரம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் கைப்பற்றப்பட்ட ஃபென்டனில், அ‍மெரிக்காவில் வசிக்கும்  33 கோடி  மக்களையும் கொல்வதற்குப் போதுமானது என அம்முகவரகம் குறப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »