ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் கப்பலெனான்று மூழ்கியதால் 8 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் ஜப்பானிய, தென் கொரிய கரையோர காவல் படையினர் இன்று (25) ஈடுபட்டுள்ளனர்.
இக்கப்பலிலிருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ஜப்பானிய கரையோர காவல்படை பேச்சாளர் தெரிவித்தள்ளார்.
ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஜின் டியான் (Jin Tian) எனும் சரக்குக் கப்பலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இடர் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. நிர்க்கதியாக இருந்த ஊழியர்களை மீட்பதற்கு, அப்பகுதியிலிருந்த 3 தனியார் கப்பல்கள் உதவியதாக மேற்படி பேச்சாளர் தெரிவித்தள்ளார்.
6 பேர் தென் கொரிய கரையோர காவல் படையினரால் காப்பாற்றப்பட்டனர் என அவர் கூறினார்.
11 பேர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.