Our Feeds


Tuesday, March 14, 2023

News Editor

அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட தபால் சேவை


 தபால் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளா அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »