இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்த கண்டி வீசா மையத்தின் இணையத்தளத்தில் இரகசியமாக நுழைந்து பெருந்தொகையான பணத்திற்கு இந்திய விசாவை வழங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு ஒன்றில் பிரதானமாக செயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபருடன், பாரியளவிலான மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய விசாக்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பம்பலப்பிட்டி பிலிப் குணவர்தன மாவத்தையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதான உள்ளூர் பிரதிநிதிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொண்ட .நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடிந்துள்ளது.
பொலிஸ் மூலோபாய நிபுணர் ஒருவர் சந்தேக நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வீசாவைப் பெறுவதாக கூறி அவரிடம் சிறிது நேரம் உரையாடி அனைத்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறி்த்த சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள சந்தேகநபர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்தள்ளனர்.