பட்டாசுகளின் விலை 40 சதவீதம் அதிகரிப்பு!
நாட்டில் கடந்த டிசம்பர் பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது.
டிசம்பருடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஏனைய உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்படுகின்ற போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.