Our Feeds


Sunday, April 2, 2023

Anonymous

657 மில்லியன் ரூபா இழப்பீடு பெறவுள்ள விவசாயிகள் - கமநல காப்புறுதி சபை அறிவிப்பு

 



2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.


மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்தில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


மேலும் 2021 பெரும்போக பருவத்தில் 25 மாவட்டங்களில் 31,613 விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், 42,934 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் சேதமடைந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »