மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு சைக்கிளைத் திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிசின் ஐஆர்சி பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து 31ம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மாச் மாதம் 22 ம் திகதி பாடசாலை மாணவன் ஒருவன் நகர் பகுதி மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிசார் அந்த பகுதிவீதியிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா மூலம் திருடனை தேடிவந்த நிலையில் பொதுச்சந்தை கட்டிட பகுதியில் பிச்சைக்கார வேடம் பூண்டு பிச்சை எடுத்துவந்த தெமட்ட கொடை பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கொழும்பில் 7 குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டவர் எனவும் இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆயர்படுத்திபோது இவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.