Our Feeds


Sunday, April 9, 2023

Anonymous

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு!

 



2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் விற்பனை 32% வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக Cox Automotiv என்ற ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


இதற்கு முக்கிய காரணம் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தங்களது புதிய வாகனங்களின் விலையை குறைத்துள்ளதாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, அமெரிக்க வாகனப் பட்டியல்களின்படி, பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் சராசரி விலை தற்போது சுமார் $43,400 டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


டெஸ்லா நிறுவனம் கடந்த வியாழன் அன்று அமெரிக்காவில் மின்சார கார்களின் விலையை 2% முதல் 6% வரை குறைத்துள்ளது, இது இந்ததாண்டில் ஐந்தாவது முறையாக அந்நிறுவனத்தின் விலைக் குறைப்பு நடவடிக்கை என கூறப்படுகிறது.


2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 225,000இற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »