Our Feeds


Tuesday, August 20, 2024

Zameera

தேசிய மக்கள் சக்திக்கு 50% வாக்குகள்: அநுர குமார


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் இது 60-70% வரை உயரும் என்றும் அவர் கூறினார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபயவின் 69 இலட்சத்தில் 50 இலட்சம் பேர் பாரம்பரிய பொதுஜன பெரமுன கட்சியல்ல. சஜித்திற்கு கிடைத்த 55 இலட்சம் சஜித்தின் சொந்த வாக்குகள் அல்ல கோட்டாபயவிற்கு எதிரான வாக்குகள். கட்சிகளிடம் 80 லட்சத்துக்கும் அதிகமான எழுதப்படாத வாக்குகள் உள்ளன. 12 லட்சம் புதிய வாக்குகள் உள்ளன. எனவே, NPP 70 லட்சத்தைத் தாண்டும். NPP 51% ஐ விட அதிகமாக உள்ளது. அரசியல் கண்ணோட்டத்தில், இது 60%-70% க்கு அருகில் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »