எமது நாட்டில் பொதுமக்களுக்கான சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. சட்டம் பணக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் ஒருவிதமாக செயல்படுவதோடு, சாதாரண பொது மக்களுக்கு இன்னுமொருவிதமாக செயல்படுவதும் உண்டு.
சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதைகளில் தேவையான விதத்தில் பயணிக்க கூடிய பாதுகாப்பான தேசம் ஒன்றையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மீரிகம நகரில் நேற்று திங்கட்கிழமை (19) மாலை இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் பாடசாலை கட்டமைப்பை ஆதிக்கத்திற்குட்படுத்தி உள்ளது. அரசாங்கத்திற்கு புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்ற கண்காட்சிக்குரிய வேலை திட்டத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது.
நாட்டின் பிரபல்யமானவர்களுடன் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.போதைப் பொருட்களை இல்லாது ஒழிப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
Tuesday, August 20, 2024
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவேன் - சஜித்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »