பாராளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை அவதானிக்க உள்ளனர்.
மேலும், பொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பார்வையாளர்களும் வர உள்ளனர்.