ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 2031ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை.
ஆரம்பத்தில் ஆசியக் கிண்ண தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் இணைக்கப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலகக்கிண்ண தொடர் நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 2025 நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து 2027ல் பங்களாதேஷிலும் (ஒருநாள்), 2029ல் பாகிஸ்தானிலும் (டி20), 2031ல் இலங்கையிலும் (ஒருநாள்) நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக்கிண்ண தொடர் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.