நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (10) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, ஹொரணை, மத்துகம, புலத்சிங்கள மற்றும் வல்லவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் அதிக மழை பெய்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
Thursday, October 10, 2024
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »