Our Feeds


Monday, October 14, 2024

Sri Lanka

எல்பிட்டிய தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று!


எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (14) இடம்பெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திய போதும் அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் மாத்திரமே தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »