நானோ அல்லது எனது சகோதரர் யோசித ராஜபக்சவோ தவறிழைத்துள்ளோம் என்பதை அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச சவால்விடுத்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் கடும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு பதில் அரசாங்கம் தனது குடும்பத்தினை இலக்குவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களும் சட்டவிரோதமாக காணிகளை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர் அவர்களிற்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் உள்ளன என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ள அவர் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அரசியல் மயப்படுத்தக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நான் மாத்திரம் அரசாங்கத்தை விமர்சித்துவருகின்றேன் இதனால் அரசாங்கம் எங்கள் குடும்பத்தை இலக்குவைக்கின்றது குறிப்பாக எனது சகோதரரை இலக்குவைக்கின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.