Our Feeds


Monday, April 13, 2026

SHAHNI RAMEES

மற்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது! பிரிட்டன் பிரதமர் அதிரடி

 


ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றநிலைக்கு மத்தியில்,

அந்தப் பகுதியில் எந்தவொரு முற்றுகை நடவடிக்கையிலும் பிரிட்டன் ஈடுபடமாட்டாது என கியர் ஸ்டார்மர் Keir Starmer தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில், கடல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட கூட்டாளி நாடுகளுடன் இணைந்து விரைவாக ஒரு விரிவான கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும், மற்ற நாடுகள் தங்கள் விவகாரங்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டுள்ள சர்வதேச பதற்றநிலைக்கு இடையே, பிரிட்டனின் இந்த நிலைப்பாடு கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »