Our Feeds


Friday, August 28, 2026

Zameera

மாத்தறையில் போதைப்பொருளுடன் அழகுநிலைய உரிமையாளர்களான தம்பதியினர் கைது!


 மாத்தறையில் அழகு நிலையம்  ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 'ஐஸ்'  மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட தம்பதியினர் இன்று வெள்ளிக்கிழமை  (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


இவர்கள் இருவரும் நீண்டகாலமாகவே இப் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »