Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மாற்று வழிமுறைகளை நாடுவது அவசியம் - உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட!


 (எம்.மனோசித்ரா)


நீதிமன்றங்களில் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியுள்ள பின்னணியில், பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மாற்று வழிமுறைகளை நாடுவது மிகவும் முக்கியமானது என உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே யசந்த கோதாகொட இக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,Geographic Reference


நம்மைப் போன்ற நாடுகளில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரிப்பதும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது.


இது நாட்டின் தலைமைத்துவம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கவனத்தைப் பெற்ற ஒரு பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. நீண்ட காலமாக இது குறித்து ஆய்வு செய்ததன் மூலம், இதற்கான காரணங்கள் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது.



இங்குள்ள தற்போதைய பிரச்சினை என்னவென்றால், சட்ட வல்லுநர்களாகிய நாம் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு வேறு வழிமுறைகளைத் தேடாமல், உடனடியாக வழக்கையே மார்க்கமாகத் தேர்ந்தெடுப்பதாகும்.


இது நமது சட்டக் கல்வியிலிருந்தே தொடங்குகிறது. பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மிக உயரிய மற்றும் மிகவும் பயனுள்ள வழியாக நீதிமன்றத் தீர்ப்புகளைப் பெறும் வழக்குகளையே நாம் பார்த்திருக்கிறோம். எனவே, சட்ட வல்லுநர்களும் சட்டக் கல்வித் துறையும் இதற்கு ஓரளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.


பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணல், மத்தியஸ்தம், நல்லிணக்கம் மற்றும் இணக்கத்தீர்ப்பு போன்ற பிணக்குத் தீர்ப்பு வழிமுறைகளை நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் முறைக்கு வெறும் மாற்று வழிகளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் அவை நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் முறைக்கு நிகராகப் பலவீனமான மாற்று வழிகள் அல்ல.


சிக்கலான வணிகப் பிணக்குகள் மற்றும் குற்றவியல் தொடர்பான பிணக்குகளை நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்றாலும், தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிணக்குகளில் 90 சதவீதம் மாற்று வழிமுறைகள் மூலம் பயனுள்ள வகையில் தீர்க்கப்பட முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »