பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசமவினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான கருத்து குறித்து மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் 17661/2026 என்ற வழக்கு எண்ணின் கீழ் இன்று (06) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்போது, குறித்த விசாரணைகளுக்காக மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சாகர காரியவசம ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொலிஸ் மா அதிபர் தொடர்பாக விடுத்த அச்சுறுத்தலான கருத்துத் தொடர்பான தொகுக்கப்படாத காணொளி காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு 6 ஊடக நிறுவனங்களுக்குக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Thursday, August 6, 2026
சாகரவின் சர்ச்சை கருத்து தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பொலிஸார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
